திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை தலைவர் வாலீசன் தலைமை தாங்கினார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விளக்க அட்டைகளை அணிந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர். மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், ஓய்வூதியர் சங்க மாநில பொறுப்பாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொறுப்பாளர் கல்யாணராமன், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி, டெல்லி போராட்டத்தில் பங்கேற்று இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com