நெல்லை அருகே டிரைவரை தாக்கிய சகோதரர்கள் கைது

நெல்லை அருகே குடும்ப தகராறில் டிரைவரை தாக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

பாளை நொச்சிகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் பெருமாள் (வயது33), லாரி டிரைவர். இவரது தங்கை ஆறுமுகசெல்வியை அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை (30) என்பவர் திருமணம் செய்து உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆறுமுக செல்வி தற்போது தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று சின்னத்துரை அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பெருமாளை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, பாலமுருகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com