கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: புரோக்கர் கைது

கோவையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ஆர்.ஆர்.லே அவுட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த விபசார புரோக்கரான அசாமை சேர்ந்த கூல் பகதூர் ராணா (வயது34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது நண்பர் குமார் என்பவருடன் சேர்ந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அழகிகளை அழைத்து வந்து இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.1630 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த டெல்லியை சேர்ந்த 25 வயது மற்றும் 24 வயது அழகியையும், மும்பையைச் சேர்ந்த 20 வயது அழகியையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய கூல் பகதூர் ராணாவின் நண்பரான குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com