மூங்கில்துறைப்பட்டு அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகே மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் உம்ரான் மகன் பக்ருதீன்(வயது 30). இவருடைய மனைவி சுக்ரியா பானு. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பக்ருதீன் மது அருந்துவதற்கு வீட்டில் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருடைய குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த பக்ருதீன், விஷத்தை எடுத்து குடித்து விட்டார். 

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பக்ருதீன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com