திருவையாறு அருகே மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது

திருவையாறு அருகே 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திருவையாறு:

திருவையாறு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் 17 வயதான 10-ம் வகுப்பு மாணவனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர்.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்த மாணவி மயங்கி விழுந்தார். இதனால் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com