பொம்மிடி அருகே வேன் டிரைவர் தற்கொலை

பொம்மிடி அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கும்பாரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் ராமச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com