பொம்மிடி அருகே கார் மோதி நூற்பாலை ஊழியர் பலி

பொம்மிடி அருகே கார் மோதி நூற்பாலை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பொம்மிடி:

பொம்மிடி அருகே உள்ள ஜாலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 24). இவர் பொம்மிடியில் உள்ள தனியார் நூற்பாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் கடத்தூரில் இருந்து ஜாலியூர் நோக்கி காரில் வந்தார். ரேகடஅள்ளி அண்ணா நகர் பஸ் நிறுத்தம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com