பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் அருகே குண்டுவெடிப்பு - 25 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
Published on

லாகூர்:

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ராவல்பெண்டி மாவட்டம் கஞ்ச் மண்டி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி உள்ளது. இங்கு போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

இந்நிலையில், கஞ்ச் மண்டி போலீஸ் நிலையம் அருகே இன்று திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பால் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து, போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் விரைந்து வந்து குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவரும் பாதுகாப்பு அதிகாரிகள், இந்த தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com