நீட் தேர்வினால் மட்டுமே மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற முடிந்தது- பாஜக

நீட் தேர்வினால் மட்டுமே மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற முடிந்தது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தி.நாராயணன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on

சென்னை:

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வினால் ஒரேஆண்டில் 313 தமிழக அரசு பள்ளி மாணவ -மாணவிகள் சேர்ந்துள்ளநிலையில், நீட் தேர்வு நடத்துவதற்கு முன்பு நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தது போன்ற ஒரு தோற்றத்தை தமிழக அரசியல்கட்சிகள் ஏற்படுத்த முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வினால் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை ஒரேஆண்டில் எட்டப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தனியார் பள்ளிகளின் ஆக்கிரமிப்பால் அலட்சியமான கல்வித்திட்ட அமைப்பால் இதுநாள் வரை தகுதியிருந்தும் மருத்துவக்கல்லூரிகளில் அனுமதிபெறமுடியாத அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தற்போது 10 மடங்கு அதிகமாக மருத்துவப்படிப்புகளில் நுழைந்துள்ளது நீட் தேர்வினால் மட்டுமே என்ற இனிப்பான உண்மை சிலருக்கு கசக்கத்தான் செய்யும்.

நீட் தேர்வினால் மட்டுமே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற முடிந்தது என்ற உண்மையை மக்கள் இனி உணருவார்கள். அதை உணரும்போது பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை வரவேற்பார்கள். அந்த உண்மை நீட் தேர்வை எதிர்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை, தோல்வியை தரும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com