லாலுவின் வெற்றிலை துப்பும் பெட்டியை சுமந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி- உமா பாரதி பாய்ச்சல்

அதிகாரிகளை அரசியல்வாதிகள் நடத்தும் விதம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்திருக்கிறேன் என்று பா.ஜனதா மூத்த தலைவரான உமா பாரதி கூறினார்.
உமா பாரதி
உமா பாரதி
Published on

போபால்:

பா.ஜனதா மூத்த தலைவரான உமா பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மூத்த அதிகாரிகளை அரசியல்வாதிகள் சிலர் அவமதிக்கும் வகையில் நடத்துகிறார்கள். தங்களது செருப்புகளை எல்லாம் அதிகாரிகளைவிட்டு எடுத்துவர சொல்கிறார்கள். 2000 ஆண்டில் நான் மத்திய மந்திரியாக இருந்தபோது அப்போதைய பீகார் முதல்-மந்திரி ராப்ரி தேவியுடன் ஒரே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன். இதில் லாலுபிரசாத் யாதவும் பயணம் செய்தார்.

அப்போது லாலுவுக்காக வெற்றிலை மென்று துப்பும் பெட்டி கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த பெட்டி இருக்கைக்கு கீழே வைக்கபட்டிருந்தது. லாலுவுக்கு எப்போதெல்லாம் துப்ப வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது அங்கிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பார்ப்பார். அவர் சீட்டுக்கு அடியில் உள்ள வெற்றிலை துப்பும் பெட்டியை எடுத்து நீட்டுவார். அதில் லாலுபிரசாத் துப்புவார். பின்னர் மீண்டும் இருக்கைக்கு அடியில் வைக்கப்படும். அதிகாரிகளை அரசியல்வாதிகள் நடத்தும் விதம் பார்த்து நான் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com