மதுரை அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா - மதுவுடன் கோழிக்கறி விருந்து

மதுரை அருகே உடலத்திகண்மாய் கரையில் பழமையான சக்கிவீரன் கோவிலில் மழை வேண்டி மதுபாட்டில்களுடன் கோழிக்கறி விருந்து வழங்கும் விழா ஆடி அமாவாசையையொட்டி நடந்தது.
மது பாட்டில்களுடன் கறி விருந்தில் கலந்து கொண்ட ஆண்கள்
மது பாட்டில்களுடன் கறி விருந்தில் கலந்து கொண்ட ஆண்கள்
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது எட்டிமங்களம். இங்குள்ள உடலத்திகண்மாய் கரையில் பழமையான சக்கிவீரன் கோவிலில் மழை வேண்டி மதுபாட்டில்களுடன் கோழிக்கறி விருந்து வழங்கும் விழா ஆடி அமாவாசையையொட்டி நடந்தது.

இந்த கோவிலுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் வழங்கிய ஏராளமான சேவல்கள் பலியிடப்படு கோழிக்கறி மண் பானைகளில் சமைக் கப்பட்டது.

பின்னர் கோவிலில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு கோழிக்கறி படையலிடப்பட்டது. பூசாரி பாரம்பரிய வழக்கப்படி பூஜைகள் செய்தபின் பக்தர்களுக்கு மதுபாட்டில்களுடன் கறிவிருந்து வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஆண் கள் மட்டுமே கலந்து கொண்டனர். மது பழக்கம் உடையோருக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது. அவர்கள் மது குடித்து கறிவிருந்தில் கலந்து கொண்டனர்.

முன்னோர்கள் நடத்தி யபடி மழைவேண்டி இந்த விழா கொண்டாடப் படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஏராளமான ஆண் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com