கூடலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் 11-வது வார்டு கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 50). பால்கறவைக்காரர். மேலக்கூடலூர் கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (45) விவசாயி. இவர்கள் இரண்டு பேரும் கழுதை மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தம்மனம்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது சிவகாசியில் இருந்து குமுளி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சிலமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில், படுகாயம் அடைந்த கர்ணனும் கண்ணனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதேபோல் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் சேதமடைந்தது. ஓட்டி வந்த கார் டிரைவரான சிவகாசியை சேர்ந்த சுப்பையா (35) லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com