பீகாரிலும் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பீகாரிலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மந்திரி நிதிஷ் குமார்
முதல் மந்திரி நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.

வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து, குஜராத், தமிழகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பீகார் மாநிலத்திலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com