பேரிகை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

பேரிகை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). விவசாயி. நேற்று இவர் குடும்பத்தினருடன் தோட்டத்திற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வீட்டிற்கு திரும்பிய வெங்கடேஷ் வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் வெங்கடேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்தகண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக பேரிகை போலீசில் வெங்கடேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com