பாபநாசத்தில் டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது

பாபநாசத்தில் டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடியவரை போலீசார் கைது செய்து 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது
கைது
Published on

பாபநாசம்:

பாபநாசம் தெப்பக்குள தெருவில் வசித்து வருபவர் கிட்டு (எ) கிருஷ்ணன் (வயது 49). இவருக்கு சொந்தமான டிராக்டரில் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை இரவு நேரத்தில் திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து கிருஷ்ணன் பாபநாசம் போலீசில் புகார் கொடுத்திருந்தார் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா மூலம் விசாரணை நடத்தினர்.

இதில் பாபநாசம் ரோஸ் நகரை சேர்ந்த சாகுல்அமீது (40) என்பவர் பேட்டரியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சாகுல்அமீதை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்ட்ரேட் சிவக்குமார் உத்தரவின் பேரில் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com