வத்தலக்குண்டுவில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வத்தலக்குண்டுவில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடு
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் நடகோட்டை ஊராட்சியில் வத்தல்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 25 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதியிடம் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com