திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் - வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வங்கி வேலை நிறுத்தம்
வங்கி வேலை நிறுத்தம்
Published on

வேலூர்:

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதையடுத்து, நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும், நாளை மறுநாளும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமாறன் அறிக்கையில் இதை உறுதிபடுத்தியுள்ளார். 

”நாளை(திங்கட்கிழமை), நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வங்கி வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். எனவே தெருமுனை கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கருப்பு பட்டை அணிதல், எதிர்ப்பு முகக்கவசம், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், பதாகைகள் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில் 68 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது” இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com