சாலையோரம் வீசப்பட்ட 3 மாத ஆண் குழந்தை மீட்பு

குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றது யார்? எதற்காக வீசிச் சென்றனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை மீட்பு
குழந்தை மீட்பு
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை கோரிபள்ளம் தூய இம்மானுவேல் ஆலய குருமனை வளாக நுழைவுவாயில் அருகே சாலையோரத்தில் நேற்று 3 மாத ஆண் குழந்தை கவனிப்பாரற்று அழுதவாறு கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றது யார்? எதற்காக வீசிச் சென்றனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com