

புதுடெல்லி:
கொரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கொரோனா காலத்துக்கு முன்பு விமான நிறுவனங்கள் இயக்கியதில் 72 சதவீத உள்நாட்டு விமானங்களை மட்டும் இயக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், அதிகபட்சமாக 85 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்...அயோத்தி ராமர் கோவிலுக்கு 115 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்