ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு வெல்டர் பலி

ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு வெல்டர் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஆவடி:

ஆவடி காமராஜர் நகர் ஸ்டாலின் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). வெல்டரான இவர், நேற்று காலை தனது பெற்றோருடன் மின்சார ரெயிலில் சென்னை செல்வதற்காக ஆவடி ரெயில் நிலையம் வந்தார். பின்னர் டிக்கெட் எடுத்து விட்டு முதல் நடைமேடையில் இருந்து 2-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான சுரேசுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com