வாணியம்பாடி அருகே ஆட்டோ மோதி சிறுவன் பலி

வாணியம்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஆட்டோ மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான்.
விபத்து
விபத்து
Published on

வாணியம்பாடி:

ஆந்திராவில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வாணியம்பாடியை நோக்கி தமிழகத்துக்கு வந்து கொண்டு இருந்தது. வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தும்பேரி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த தீர்த்தமலை என்பவரின் மகன் சபரிஸ் (வயது 3) மீது திடீரென சரக்கு ஆட்டோ மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவன் பலத்த காயம் அடைந்தான்.

அவனை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் சபரிஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தகவலை கேட்டதும் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். விபத்து குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (30) கைது செய்யப்பட்டார்.

சரக்கு ஆட்டோ மோதி பலியான சிறுவன் சபரிஸ் கொரோனா ஊரடங்கின்போது, அங்கன்வாடி மையத்துக்குச் சென்று, விதை பந்துகளை சிறப்பாக தயாரித்ததாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருளிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com