

நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் தடிக்காரன் கோணம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் வீட்டில் இருந்து அழைத்து சென்றார்.
மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கல்லூரி மாணவியை ஆட்டோ டிரைவர் கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவியின் செல்போன் டவர் உதவியுடன் மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து நேற்றிரவு மாணவியை போலீசார் மீட்டனர். அவரை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
மாணவியிடம் விசாரணை நடத்திய போது, ஆட்டோ டிரைவர் தன்னை கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்றதாக தெரிவித்தார். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது அவர் எய்ட்ஸ் நோயாளி என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு சிறு வயதில் இருந்தே இந்நோய் இருந்ததாகவும், இதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.