தா.பேட்டை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

தா.பேட்டை அருகே குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 35). இவர் துறையூரில் ஆட்டோ ஓட்டி வந்தார். குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த கண்ணதாசன் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா்கள். பின்னர் கண்ணதாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com