சேரன்மாதேவி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

சேரன்மாதேவி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள மேலசடையமான்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 9-ந் தேதி தங்கராஜ் மது அருந்திவிட்டு ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கராஜை மயிலம்மாள் கண்டித்துள்ளார். மேலும் மயிலம்மாள் கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மயிலம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தங்கராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தங்கராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com