அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் அஜித் (வயது24). ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் அலங்காநல்லூர் பஸ் நிலையத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அலங்காநல்லூர் போலீசார் விரைந்து வந்து ஆபத்தான நிலையில் இருந்த அஜித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக இறந்தார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக அஜித் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com