பெண் வியாபாரியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

மதுபோதையில் பெண் வியாபாரியை தாக்கி தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

போரூர்:

கே.கே.நகர், அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரி. இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு மதுபோதையில் வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார்.

இது குறித்து கே.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பத்மாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண் வியாபாரியை தாக்கிய ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். அவர் அதே பகுதி விஜயராகவபுரத்தை சேர்ந்த நாராயணசாமி என்பது தெரிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com