கூடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

கூடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
புஷ்பம்
புஷ்பம்
Published on

கூடலூர்:

கூடலூர் பூச்சித்தேவர் சந்து தெருவை சேர்ந்தவர் நீதிராஜன்(வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் ஆட்டோவில் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் அரசமரம் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி புஷ்பம் (50), விஜயராமன் (67) அவரது மனைவி லீலாவதி (60), க.புதுப்பட்டியைச் சேர்ந்த ரேணுகா (19), அவரது சகோதரி சித்ரா (21) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றார். 

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாச்சி பண்ணை அருகே வந்தபோது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் நீதிராஜன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து புஷ்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ரேணுகா கம்பம் அரசு மருத்துவமனையிலும், விஜயராமன், லீலாவதி, சித்ரா, நீதிராஜன் ஆகியோர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com