நிவர் புயல் கரையை கடந்ததால், 4 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

நிவர் புயல் கரையை கடந்ததால், 4 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்துள்ளனர்.
மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பிய போது எடுத்த படம்.
மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பிய போது எடுத்த படம்.
Published on

நாகப்பட்டினம்:

வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக நாகை, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

புயல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கடல் சீற்றமாக இருந்ததால் நாகை மாவட்டத்தில் 54 மீனவ கிராமங்களில் 1,200 விசைப்படகுகள் மற்றும் 7 ஆயிரம் பைபர் படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த 23-ந்தேதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி இருந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

நிவர் புயல் கடந்த 25-ந்தேதி புதுச்சேரியில் கரையை கடந்தது. இதனால் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் இருந்து பைபர் படகு மீனவர்கள் மட்டும் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் 3 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சென்று மீன் பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். பைபர் படகுகள் மாலையில் திரும்பி கரைக்கு வர வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் மற்றொரு புயல் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகு மற்றும் ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படைகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மீன்வளத்துறை அறிவுறுத்தலின் படி மாலையில் பைபர் படகு மீனவர்கள் கரை திரும்பினர். 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com