திருப்பத்தூர் அருகே தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 45), ராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி (40). இவர் கந்திலி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

சாந்தி திருப்பத்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சாம்ராஜ் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையில் திருப்பத்தூருக்கு வந்துள்ளார்,

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த சாம்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சாந்தி திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்ராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com