அரிமளம் அருகே மது விற்றவர் கைது

அரிமளம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அரிமளம்:

அரிமளம், எட்டாம் மண்டகப்படி பகுதியில் ஆலங்குடி வடக்கு பாத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 53) என்பவர் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதைப்பார்த்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்பிரிவு போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து 19 மதுபாட்டில்கள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com