ஆற்காடு அருகே லாரி மோதி பெயிண்டர் பலி

ஆற்காடு அருகே லாரி மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 32), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் மாலை புதுப்பாடியில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் சின்னகுக்குண்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார்.

ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த ஒரு லாரி திடீரென சுகுமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு தாலுகா போலீசார் விரைந்து வந்து அவரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com