அரவக்குறிச்சி அருகே குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர் கைது

குடிநீர் குழாயை சேதப்படுத்தியவரை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34). இவர், குரும்பபட்டி நாடக மேடை அருகே இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதாக வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் ஊராட்சித் தலைவர் ஜெயந்திராமசிவம் அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜிடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, அரவக்குறிச்சி போலீசில் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com