

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அண்ணா நகர் முருங்கைக்காய் சந்தை அருகில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரோந்து சென்ற போலீசார் அரவக்குறிச்சி அருகே பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 53) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.