விபத்து பலி
விபத்து பலி

அரவக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் பலி

அரவக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

கரூர்:

அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாணிக்கராஜா (வயது 26) . இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாணிக்கராஜா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம், பெரம்பூர் பகுதியை சேர்ந்த கொம்பையா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com