ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் சிக்கிய மேலும் ஒரு பெண் பலி

ஆரல்வாய்மொழியில் சகோதரர் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பெண் விபத்தில் சிக்கி பலியானார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஆரல்வாய்மொழி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் படசேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா (வயது 45).

இவரது சகோதரர் மகன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரிகா தனது உறவினர்கள் ஜெயலெட்சுமி, கமலம், தமிழரசி ஆகியோருடன் ஆரல்வாய் மொழிக்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் ஜெயலெட்சுமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கமலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு கமலம்பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com