அரக்கோணம் அருகே வாலிபர் தற்கொலை

அரக்கோணம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த பள்ளியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). பட்டதாரியான இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சற்று மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இவரின் தாயார் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தந்தையும் வீட்டை விட்டு வெளியே போனதால் விரக்தி அடைந்த ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com