அரக்கோணம் அருகே குடிபோதையில் கல்லால் தாக்கி மகனை கொன்ற தந்தை

அரக்கோணம் அருகே மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை
கொலை
Published on

அரக்கோணம்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பெருமாள் தாங்கல் புதூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி.இவரது மகன் மகேஷ் என்கிற மணிகண்டன் (வயது23). இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களது விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் உள்ளது.

நேற்று இரவு கீழாந்தூரில் உள்ள விவசாய நிலத்திற்கு தந்தையும், மகனும் சென்றனர். அங்கு தட்சிணாமூர்த்தியும் மகேஷும் மது குடித்தனர். அப்போது மதுபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி மகன் என்று கூட பார்க்காமல் மகேசை கல்லால் தாக்கினார்.

மேலும் அவரை கீழே தள்ளி கல்லை தூக்கிப் போட்டார். இதில் மகேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com