மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி

அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி

அரக்கோணத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் ஷா நகரில் ஒரு இடத்தில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது தளம் அமைப்பதற்காக சிமெண்டு கலவை எடுத்து செல்வதற்கு இழுவை அமைக்கப்பட்டிருந்தது. இழுவையில் சிமெண்டு கலவை எடுக்கும் வேலையில் இரண்டாவது தளத்தில் நாகவேடு அருந்ததியர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மாரி (வயது 30) ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இழுவையின் வயர் அறுந்து வீட்டிற்கு அருகில் இருந்த மின்சார வயரில் பட்டதால் அதில் மின்சாரம் கசிந்தது. அப்போது இழுவை வயரை பிடித்திருந்த மாரி மீது மின்சாரம் பாயவே அவர் சுருண்டு விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் மாரியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com