அனுப்பானடியில் டாஸ்மாக் கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து

அனுப்பானடியில் டாஸ்மாக் கடையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து
கத்திக்குத்து
Published on

மதுரை:

மதுரை மேல அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த முத்துக் குமார் மகன் இருள்ராஜ் (வயது 22).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில் இருள்ராஜ் நேற்று மதியம் புது ராமநாதபுரம் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அங்கு சிலர் வந்தனர். அவர்கள் இருள்ராஜை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டகர்.

இதுதொடர்பாக இருள் ராஜ் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் உள்பட 10 பேரை தேடி வருகின்றனர்.

இதே வழக்கில் ஜெய் ஹிந்த்புரம் வள்ளுவர் வடக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் விக்னேஸ்வரன் (21) கொடுத்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உக்கிரபாண்டி தெருவைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் எலி சூர்யா (23) உள்பட 10 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com