தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சந்தனமாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மரியம்மாள், செயலாளர் சந்திரா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வரண்முறைப்படுத்தப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் சித்திரலேகா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com