திருப்பத்தூரில் அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருப்பத்தூரில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த கூலிப்படையினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன் (வயது 28). இவர் திருப்பத்தூரில் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமபேட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சங்கர் (62) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் வானவராயனை பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் மகன் தாமஸ் (28), கோவிந்தசாமி மகன் சூர்யா (28), திருப்பத்தூர் கவுதம பேட்டைபகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அம்ரிஷ் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com