அடைக்கலாபுரத்தில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா வரவேற்று பேசினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அஜய், டாக்டர் அம்பிகாபதி திருமலை, காயாமொழி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், செல்வகுமார், மகாராஜன், ஆனந்தராஜ்,

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், காசிராஜன், அழகேசன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ஜேசுராஜ், காயல்பட்டினம் கூட்டுறவு சங்க தலைவர் பூந்தோட்டம் மனோகரன், கானம் நகர செயலாளர் செந்தமிழ் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com