ஆம்பூர் அருகே டெய்லர் தற்கொலை

ஆம்பூர் அருகே டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 48), டெய்லர். அவரது மனைவி லட்சுமி (45). தினமும் ராமச்சந்திரன் குடித்துவிட்டு மனைவிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு ராமச்சந்திரன் குடிபோதையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் இந்நிலையில் நேற்று ராமச்சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com