ஆம்பூர் அருகே மினிலாரி மீது கார் மோதி பெண் பலி

ஆம்பூர் அருகே மினிலாரி மீது கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஆம்பூர்:

சென்னையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரு கார் சென்றது. காரை ஆல்பர்ட் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த காரில் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த மேரி (55), சசிகுமார் (38), அவரது மனைவி ஆனந்தி (31), ராபர்ட்பால் (60), சமாதானம் (55) ஆகியோர் வந்தனர்.

ஆம்பூர் அருகே சின்னகொம்மேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணி அளவில் வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசை சாலையில் சென்றது.. அப்போது எதிரே தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (45) என்பவர் ஒட்டி வந்த மினிலாரி மீது கார் மோதியது இந்த விபத்தில் சமாதானம் (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் காயமடைந்தவர்களை மீட்டனர். இதில் 4 பேரை வேலூர் அரசு மருத்துவமனைக்கும் 2 பேரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com