ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ஆம்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

ஜோலார்பேட்டை:

ஆம்பூரை அடுத்த டவஸ்கார்புரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). இவர், ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com