வேலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர்:

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கர் மேஸ்திரி, சுப்பிரமணியன், திருப்பதி, சுந்தரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் சட்ட தொகுப்புகள் கைவிடவேண்டும். பீடி தொழில் முறைசாரா கட்டுமானம் ஆட்டோ, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச பென்‌ஷன் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு காப்பீடு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com