சங்கராபுரம் அருகே மினி லாரியில் சாராயம் கடத்தல்: தந்தை-மகன் கைது

சங்கராபுரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் சாராயம் கடத்தி வந்த தந்தை, மகனை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சங்கராபுரத்தை அடுத்த புதுப்பாலப்பட்டு தெத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மினி லாரியில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபதி (வயது 50), இவரது மகனும், டிரைவருமான சுமன்(19) என்பதும், இருவரும் சேர்ந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 

இதையடுத்து தந்தை-மகனை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 250 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com