நன்னிலம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது

நன்னிலம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
கைது
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நன்னிலம் அருகே சன்னாநல்லூர் கடைத்தெருவில் ரோந்து சென்றபோது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் நல்லமாங்குடி பாலம் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த ரஸ்தா தெருவை சேர்ந்த அருளானந்தம் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் மணவாளம்பேட்டை அருகே மது பாட்டில் விற்ற கந்தன் (38) என்பவரை ேபாலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பேரிடம் இருந்தும் மொத்தம் 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com