காரைக்காலில் துப்புரவு தொழிலாளி தற்கொலை

காரைக்காலில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் துப்புரவு தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

காரைக்கால்:

காரைக்கால் நெடுங்காடு புத்தகுடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 51). கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சுந்தரமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை மனைவி கண்டித்ததால், அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரமூர்த்தி தற்கொலை செய்துகொள்வதாக சுலோச்சனாவை மிரட்டிவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் கொள்ளை புறத்தில் சுந்தரமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெடுங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com