போராடும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் - விவசாய தலைவர் வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்களை கடந்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Published on

சண்டிகர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இதுவரை நடந்த அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதீய கிசான் யூனியன் என்ற  விவசாய அமைப்பின் தலைவர் குர்ணம் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.

விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள இந்த அறிவிப்பால் போராட்டம் திசை திரும்பிச் செல்லும் சூழலும் காணப்படுகிறது. இதனால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் தொடங்கிய விவசாயிகள் அரசியலில் நுழையக்கூடிய சாத்தியமும் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com